ஈரானில் ஆபாச பட நடிகை!
அமெரிக்க ஆபாச பட நடிகை ஈரானில் கைவிடப்பட்ட அமெரிக்க தூதரகத்தைப் பார்வையிட சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலைஞர்கள் மற்றும் பெண்கள் நுழைய கடும் விதிகளைக் கொண்டுள்ள ஈரானில் ஆபாச பட நடிகைக்கு விசா வழங்கப்பட்டது குறித்து சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இஸ்ரேல்- ஹமாஸ் போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக குரல் எழுப்பிய விட்னி ரைட் அமெரிக்காவில் பிறந்தவர். ரைட் தனது ஈரானிய பயணத்தில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
விட்னி, “இதுவரை யாரும் காணாத அருங்காட்சியகத்தின் படங்களை நான் பகிர்கிறேன். இது அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத இடம்” எனத் தெரிவித்து அமெரிக்க தூதரகத்தில் எடுத்த படங்களைப் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது.
1979 ம் ஆண்டு இஸ்லாமிய கிளர்ச்சிக்குப் பிறகு கைவிடப்பட்ட தூதரகம் அது. அங்கு பணியாற்றிய தூதரக அதிகாரிகள் 444 நாள்கள் பிணையில் வைக்கப்பட்டிருந்தனர்.
தற்போது, அமெரிக்காவுக்கு எதிரான அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ள இந்த இடம், “கட்டாயம் பார்க்க வேண்டிய இடம்” என விட்னி தெரிவித்துள்ளார்.
ஈரானிய அரசு, பெண்கள் ஹிஜாப் அணிவது குறித்தான கடும் விதிகளையும் அதனை மீறுபவர்களுக்கான தண்டனையையும் கடுமையாக கொண்டுள்ள நாடு. பெண்களைத் தன்னை வெளிப்படுத்துவது தடை என்பதால் விட்னியின் ஆபாச படத் தொழிலுக்கு ஈரானில் மரண தண்டனை கூட விதிக்கப்படலாம் என பயனர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில் ஈரானிய நடிகை செடாரே பெசானி, “ஹிஜாப் அணியாததற்கு நாட்டின் மக்களை பல்வேறு வகையில் தண்டிக்கும் அரசு ஆபாச நடிகையின் சுற்றுலாவுக்கு அனுமதியளித்துள்ளது” என எக்ஸ் வலைத்தளத்தில் அரசைச் சாடியுள்ளார்.