OOSAI RADIO

Post

Share this post

மனைவிக்கு டிப்ஸ் – நிராகரித்த அலிஸா ஹீலி! (விடியோ)

பிரபல அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் தனது மனைவி அலிஸா ஹீலிக்கு அறிவுரை வழங்கிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட்டில் பிரபலமான வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் சிறப்பாக பந்து வீசினார். ஆஸி. அணி கிண்ணத்தை வென்றது.

மேலும், ஐபிஎல் இல் மிட்செல் ஸ்டார்க் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதாவது ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார்க்கின் மனைவியும் ஆஸி. மகளிர் கிரிக்கெட்டின் தலைவருமானவர் 33 வயதான அலிஸா ஹீலி. இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். 106 மகளிர் ஒருநாள் போட்டிகளில் 2879 ஓட்டங்களும் மகளிர் சரவதேச டி20யில் 2795 ஓட்டங்களும் எடுத்து அசத்தியுள்ளார். டி20யில் 148* ஓட்டங்கள் அடித்து அசத்தியுள்ளார்.

இருவரும் கிரிக்கெட் விளையாடினாலும் ஒருவருக்கொருவர் நேரடியாக களத்துக்கு வந்து ஆதரவு தெரிவிப்பார்கள் நேரம் இருக்கும் போதெல்லாம்.

தென்னாப்பிரிக்க மகளிருக்கும் ஆஸி. மகளிருக்குமான 2வது ஒருநாள் போட்டியில் ஸ்டார்க் வர்ணனையில் இருந்து மனைவி அலிஸா ஹீலி டிப்ஸ் வழங்குவார். “கிம் கார்த் இன்னும் கொஞ்சம் புல்லராக பந்து வீசினால் எட்ஜ் விழுமென நினைக்கிறேன்” என ஸ்டார்க் கூறுவார்.

அதற்கு, “நீங்கள் கடுமையான விமர்சனமாக அதைக் கூறினால் கிம் கார்த்தால் அதை நிச்சயமாக செய்ய முடியும். ஆனால், இதுதான் அவரது இயல்பான லைன், லென்த். ஒரு பக்கம் ரன்களேதுமின்றி வலுவாக பந்து வீசுவதே அணியில் அவருக்கு வழங்கப்பட்ட பங்காகும்” என ஸ்டார்க் வழங்கிய டிப்ஸுக்கு மறுமொழி கூறினார் அலிஸா ஹீலி.

Mitch Starc tried to ask Alyssa Healy what he must have thought was a good question...

And Healy was having none of it 😂 #AUSvSA pic.twitter.com/TzZvzLYeag
— 7Cricket (@7Cricket) February 7, 2024

Leave a comment

Type and hit enter