OOSAI RADIO

Post

Share this post

200 ஆண்டுகளுக்கு பிறகு 3 இராஜயோகங்கள்!

ஜோதிட விளக்கங்களுக்கமைவாக சில இராசியினருக்கு பல விதத்தில் குடும்பம் மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்றத்தையும், வெற்றியையும் தரக்கூடியதாக பெப்ரவரி , மார்ச் மாதங்கள் அமையவுள்ளன.

மகரம், கும்பம், மீன ராசியில் உருவாகக்கூடிய மூன்று முக்கிய ராஜயோகங்கள், சில ராசியினருக்கு இந்த இரு மாதங்களில் பல விதத்தில் குடும்பம் மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்றத்தையும், வெற்றியையும் தரக்கூடியதாக அமையப் போகிறது.

ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி மற்றும் கிரக சேர்க்கையானது பலவித யோகங்கள் உருவாகி அதனால் நன்மைகளை அள்ளித் தருவதாக இருக்கும்.

அந்த வகையில் 200 ஆண்டுகளுக்கு பின்னர் மார்ச் மாதத்தில் கும்ப ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கக்கூடிய ஷச மகா புருஷ ராஜயோகம் உருவாகிறது. மகரத்தில் செவ்வாய் உச்சம் பெறக்கூடிய ருச்ச ராஜயோகமும், மீன ராசியில் சுக்கிரன் மாறக்கூடிய மாளவ்ய ராஜயோகமும் உருவாகிறது.

மூன்று ராஜயோகங்கள் உருவாகக்கூடிய நிலையில் ரிஷப ராசியினருக்கு சாதகமானதாக அமையும். இந்த நேரத்தில் நீங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்களின் திட்டமிட்ட வேலையில் நல்ல வெற்றி பெற வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் உங்கள் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ராஜயோகத்தின் அமைப்பால், வியாபாரம் நன்றாக நடக்கும், பொருளாதார ரீதியாகவும் செழிப்பு அதிகரிக்கும். தொழில் முன்னேற்றத்திற்கான பொன்னான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நண்பர்களுடன் நீண்ட பயணங்கள், சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் மாற வாய்ப்புள்ளது என்பதால் செல்வ வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் வங்கி இருப்பும் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் தந்தையுடனான உங்கள் உறவு வலுவாக இருக்கும்.

மகர ராசியில் செவ்வாய் பகவானின் சஞ்சாரமும், மகரம், கும்பத்தில் சூரியனின் சஞ்சாரமும் நடக்கும் போது எதிர்பாராத நிதி நன்மைகளை உங்களுக்கு தருவதாக இருக்கும். உங்களின் ஆளுமை மேம்படும். உங்கள் நிதி நிலை சிக்கல் தீரும். கடன் வாங்கியிருப்பவர்களுக்கு அதை திரும்பி செலுத்தி மன நிம்மதி கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் சொத்துக்கள் வாங்க நினைத்திருந்தால் அதில் முன்னேற்றம் உண்டாகும். சிலருக்கு வேலை அல்லது வணிகம் தொடர்பான பயணங்கள் நடக்கும். மங்களகரமான பலன்கள் கிடைக்கும்.

மீன ராசியினருக்கு உருவாகக்கூடிய 3 ராஜ யோகங்களின் மூலம் மங்களகரமான சுப காரியங்கள், வேலையில் முன்னேற்றம் உள்ளிட்ட பலனளிக்கும். இந்த நேரத்தில், கடின உழைப்புடன், அதிர்ஷ்டமும் உங்களை முன்னேற்ற உதவும். தொழில் முன்னேற்றத்திற்கான பல பொன்னான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் தேடிவரும். தொழில்முனைவோருக்கு இந்த நேரத்தில் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். வணிகம் செய்யக்கூடியவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். உங்களின் எதிர்காலம் குறித்த சிந்தனையும், முதலீடும் செய்வீர்கள். மாணவர்களுக்குச் சாதகமாக இருக்கும். எந்தப் போட்டித் தேர்விலும் வெற்றி பெறலாம்.

Leave a comment

Type and hit enter