OOSAI RADIO

Post

Share this post

பாலஸ்தீனக் குழந்தை மீது இராணுவ நாயை ஏவிய இஸ்ரேல்!

காஸாவின் அனைத்து பகுதிகளிலும் இராணுவ சோதனைகளை மேற்கொண்டு தினமும் 100 க்கும் மேற்பட்ட மக்களை இஸ்ரேல் கொலை செய்துவருகிறது. நான்கு வயது குழந்தை மீது இஸ்ரேலின் ராணுவ நாய் ஏவப்பட்டதாக பாலஸ்தீனத்தின் சர்வதேச குழந்தைகள் பாதுகப்பு அமைப்பின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பெப். 4 இல் ஹஷாஷ் அடுக்குமாடிக் குடியிருப்பிற்குள் ராணுவ நாயை இஸ்ரேல் அவிழ்த்துவிட்டுள்ளது. அந்தக் கட்டிடத்தில் இருந்த 4 வயது சிறுவன் இப்ராஹிம் ஹஷாஷ்-ஐ ராணுவ நாய் கடித்துக்குதற ஆரம்பித்துள்ளது. சிறுவனுக்கு ரத்தம் ஊற்றுமளவுக்கு நாய் தொடர்ந்து கடித்துள்ளது.

மூன்று நிமிடங்களுக்கு இந்தத் தாக்குதல் தொடர்ந்ததாக குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் இஸ்ரேல் ராணுவத்தினர் நாயைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. அந்தச் சிறுவன் நப்ளஸில் உள்ள ரஃபிடியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறான்.

இஸ்ரேல் ராணுவம் பாலஸ்தீனக் குழந்தைகளைப் பாதுகாப்பதில் அலட்சியம் செய்துவருவதாக பாலஸ்தீனத்தின் சர்வதேச குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் திட்ட இயக்குநர் அயெட் அபு இக்டாய்ஷ் குற்றம் சாட்டியுள்ளார். இஸ்ரேலின் ராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளான பகுதிகளில் குழந்தைகள் பாதிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுவன் இப்ராஹிமுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. இஸ்ரேல் ராணுவம் தனது நாய்கள் மூலம் பொதுமக்களையும், குழந்தைகளையும் தொடந்து தாக்கிவருகிறது என அந்த அமைப்பு தெரிவிக்கிறது. இதுகுறித்த காணொலியை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

Leave a comment

Type and hit enter