கிண்ணத்தை அறிமுகம் செய்த பிரபல வீரர்!
சௌதி அரேபியாவின் ரியாத் சீசன் கப் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பிரபல மல்யுத்த வீரர் அண்டர்டேக்கர் கிண்ணத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
சௌதி அரேபியாவில் ரியாத் சீசன் கப் கால்பந்து இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
இந்த இறுதிப்போட்டியில் எந்த ஒரு முன்னறிவிப்புமின்றி திடீரென மல்யுத்தப் போட்டிகளில் அண்டர்டேக்கருக்கு இசைக்கப்படும் தீம் மியூசிக்குடன் மைதானத்துக்குள் அண்டர்டேக்கர் நுழைந்தவுடன் அரங்கமே அதிர்ந்தது. பின்னர், அவர் கிண்ணத்தை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த ரியாத் சீசன் கப் கால்பந்து இறுதிப்போட்டியில் அல்-ஹிலால் அணி கிண்ணத்ததை வென்றது குறிப்பிடத்தக்கது.