விஷாலின் அதிரடி அறிவிப்பு!
அரசியலை மக்கள் சேவையாக பார்க்க வேண்டும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லிவிட்டு வரமாட்டேன் என்று பின்வாங்குபவன் இல்லை. சினிமா போன்று அரசியல் கிடையாது. அரசியல் என்பது சமூக சேவை. அது துறை கிடையாது.
அரசியலை பொழுதுபோக்காக பார்க்காமல் மக்களுக்கு செய்யும் சேவையாக பார்க்க வேண்டும்.
எல்லாரும் அரசியல்வாதிகள்தான். 2026ல் தேர்தல் வருகிறது. நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்களில் போட்டியிடுவேன் என்று எதிபார்க்கவில்லை. நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள். மக்கள் சேவை செய்வதற்கு இத்தனை கட்சிகள் தேவையில்லை.
தற்போதே அதிக கட்சிகள் உள்ளன. நல்லது செய்ய முடியும் என்றால் மட்டுமே அரசியலுக்கு வருவேன்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு கட்சிக்கு பெரிய வெற்றி கிடைக்கும். என் பதவிக்காலம் முடிவதற்குள் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.