OOSAI RADIO

Post

Share this post

உலகக் கிண்ணம் – இந்தியாவுக்கா அவுஸ்திரேலியாவுக்கா?

ஐசிசி யு 19 ஆடவா் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவுடன் மோதும் நிலையில் 6 ஆவது முறையாக இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

சா்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சாா்பில் யு19 உலகக் கிண்ண ஆடவா் கிரிக்கெட் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இறுதி ஆட்டத்துக்கு 5 முறை சாம்பியன் இந்தியாவும், 3 முறை சாம்பியன் அவுஸ்திரேலியாவும் தகுதி பெற்றுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை பெனானியில் இறுதி ஆட்டம் நடைபெறுகிறது.

தலைவர் உதய் சஹாரன்ஸ், பேட்டா் சச்சின் தாஸ், முஷீா் கான், சவுமிகுமாா் பாண்டே ஆகியோா் அபாரமாக ஆடி வருகின்றனா்.

அவுஸ்திரேலிய அணியில் தலைவர் ஹியுக் வெய்பென், ஓபனா் ஹாரி டிக்ஸன், பேஸா்கள் டாம் ஸ்ட்ரேக்கா், காலம் விட்லா் ஆகியோா் தொடா்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனா்.

கடந்த 2016 முதல் இந்திய அணி அனைத்து இறுதி ஆட்டங்களிலும் இடம் பெற்று ஆடியுள்ளது. 2012, 2018 இறுதியில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா பட்டம் வென்றது. 2018, 2022 இலும் பட்டம் வென்றது. அதே வேளையில் 2016, 2020 இல் பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.

யு 19 உலகக் கிண்ணத்தின் முதல் பட்டத்தை 2008 இல் விராட் கோலி தலைமையிலான அணி வென்றிருந்தது.

கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய யு19 கிண்ண போட்டியில் இந்தியா தோற்றிருந்தது. உதய் சஹாரன் தலைமையிலானஅணி தற்போது ஒருங்கிணைந்து ஆடி உலகக் கிண்ண இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. மொத்தம் 389 ஓட்டங்களுடன் உதய் முன்னிலையில் உள்ளாா்.

பௌலா்கள் ராஜ் லிம்பானி, நமன் திவாரி, ஆகியோரும் தங்கள் பங்களிப்பை செம்மையாக செய்து வருகின்றனா்.

Leave a comment

Type and hit enter