OOSAI RADIO

Post

Share this post

அறிமுகமாகும் நேர மாற்றம்!

கனடாவில் ஆண்டுதோறும் பருவ மாற்றத்திற்கு ஏற்ற வகையில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது.

இந்நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் 10 அம் திகதி இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, 10 ஆம் திகதி ஒரு மணித்தியால மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

இதன்போது மக்கள் தங்களது கடிகாரங்களை ஒரு மணித்தியாலம் முன்னோக்கி நகர்த்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பகல்நேரத்தை சேமிக்கும் நோக்கில் இவ்வாறு நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் கடிகாரங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் கருவிகள் சாதனங்களில் தானியங்கி அடிப்படையில் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter