OOSAI RADIO

Post

Share this post

இலங்கையில் புதிய சட்டம் – கைதான முதல் நபர்!

சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பிய நபரை குற்ற விசாரணைத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதி ஒருவரின் ஆதரவுடன் குறித்த சந்தேக நபர் தீங்கிழைக்கும் வகையில் இந்த அவதூறு பரப்புரைகளை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“சந்தேக நபர் சமூக ஊடகங்கள் மூலம் எங்களை அவதூறாகப் பேசினார். மேலும், கைது செய்யப்பட்ட போது, அவரிடம் ரூபா 4 லட்சம் கைப்பற்றப்பட்டது.

இதற்காகத்தான் இணையவழி பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இந்த பரப்புரைகள் அரசை மாற்றுவதற்கு கூட பயன்படுத்தப்படலாம்” என்று அவர் கூறினார்.

சனிக்கிழமை (10) பணந்துறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேலும் தெரிவிக்கும்போது எதிர்காலத்தில் சந்தேக நபர்களின் பெயர்கள் வெளியிடப்படும் என்றார்.

Leave a comment

Type and hit enter