சூரியப் பெயர்ச்சி – அமோக பலன் பெறும் ராசிகள்!
நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். சூரியனின் ராசி மாற்றத்தின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன.
அந்த வகையில் சூரியன் தனது எதிரி கிரகமான சனி பகவானின் மூலதிரிகோண ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்துள்ளார்.
இந்த கும்ப ராசியில் சூரியன் சுமார் 1 மாத காலம் பயணிக்கவுள்ளார். முக்கியமாக இந்த ராசியில் தான் சனி பகவானும் பயணித்து வருகிறார்.
இதனால் இந்த சூரிய பெயர்ச்சியின் தாக்கமானது அதிகமாக இருக்கும். பொதுவாக எதிரி கிரகத்தின் ராசியில் ஒரு கிரகணம் பயணிக்கும் போது, அதன் விளைவாக கெடுபலன்களையே அதிகம் பெறக்கூடும். இருப்பினும் இந்த சூரியனின் பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் தரவுள்ளது.
இப்போது கும்பம் சென்றுள்ள சூரியனால் எந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காணப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
சிம்மம் – சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் வாழ்க்கைத் துணையுடனான உறவு வழக்கத்தை விட வலுவாக இருக்கும். ஆரோக்கியமும் முன்பை விட சிறப்பாக இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி ரீதியாக, அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருப்பதால், நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
மகரம் – மகர ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பணத்தைப் பெறுவார்கள். வெளிநாட்டு மூலங்களில் இருந்து நல்ல நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். நிறைய பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். வேலை செய்பவர்கள் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். இது எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும்.
விருச்சிகம் – விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வசதிகள் பெருகும்.
புதிய வாகனம், சொத்து போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். முதலீடுகளைப் பொறுத்தவரை, நல்ல லாபத்தைப் பெறக்கூடும். வியாபாரிகள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். தாயுடனான உறவு சிறப்பாக இருக்கும்.