OOSAI RADIO

Post

Share this post

இலங்கையில் இலவச காப்புறுதி திட்டம்!

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கு இலவச காப்புறுதி வழங்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

12 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையினூடாக 6 வகை பயிர்களுக்கு விவசாய காப்புறுதி இலவசமாக வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக நெல், மிளகாய், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, சோளம், சோயா ஆகிய பயிர்களுக்கு இலவச காப்புறுதி வழங்கப்படவுள்ளது.

காட்டு யானைகள், வறட்சி, அதிக மழையால் ஏற்படும் சேதங்களுக்கு மாத்திரம் இந்த காப்புறுதி வழங்கப்படவுள்ளது.

ஏனைய பயிர்களுக்கு பயிர்ச்சேத இழப்பீட்டின் கீழான காப்புறுதி வழங்கப்படும் என விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave a comment

Type and hit enter