22,738 ரூபா விலை குறைந்த தங்கம்!
24 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை இன்றைய தினம் 176,550 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேவேளை 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 161,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் நேற்றைய தினம் (13) 24 கரட் தங்க பவுண் ஒன்று 178,900 ரூபாவாக காணப்பட்டது. இதேநேரம் 22 கரட் தங்க பவுண் ஒன்று 164,000 ரூபாவாக இருந்துள்ளது.
இதன்படி தங்கத்தின் விலை 2,150 ரூபா குறைந்துள்ளமை விசேட அம்சமாகும். இதேவேளை, பெப்ரவரி 1 ஆம் திகதி 22 கரட் தங்க பவுண் ஒன்றின் விலை 167,750 ரூபாவாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒரு அவுன்ஸ் தங்கம் – 1.2.2024 (648,279)
ஒரு அவுன்ஸ் தங்கம் – 14.2.2024 (625,541)