மறைந்திருந்த பொக்கிஷம் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!
மலைகளுக்கு அடியில், பாறைகளுக்கு அடியில் அல்லது குகைகளுக்குள் பொங்கிஷங்கள் மறைந்திருக்கும் என கதைகளில் கேட்டிருப்போம். ஏன் புராண கதைகளை மையமாக கொண்ட சில திரைப்படங்களிலும் அத்தகைய காட்சிகளை பார்த்திருப்போம். ஆனால் உண்மையாகவே புதையல் கிடைத்தால் எப்படி இருக்கும்.
Fishngold என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அது நாம் கதைகளில் கேட்பது போலவே உள்ளது. மிகவும் ஆச்சர்யம் ஊட்டும் விதமாக அந்த வீடியோ உள்ளது. அந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட உடனே வைரலாக தொடங்கிவிட்டது.
காரணம் நாம் புராண கதைகளில் கேட்ட பொக்கிஷங்களை அவர்கள் தங்கள் நிஜ வாழ்க்கையில் கண்டெடுத்துள்ளனர். அந்த வீடியோவில், சிலர் ஒரு பாறையை கடப்பாறைகளை கொண்டு தோண்டுகின்றனர். அந்த பாறையின் அடியில் சேறு நிறைந்திருக்கிறது. பின்னர் அந்த சேற்றை எடுத்து கழுவியபோது அப்படியே தங்க துகள்களாக மாறி ஜொலிக்கிறது.
அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அது உண்மை தானா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனென்றால் யாரும் எளிதில் நம்ப முடியாத அளவிற்கு சில நிமிடங்களில் அவர்கள் சேற்றில் இருந்து தங்கத்தை பிரித்து எடுத்து விடுகின்றனர். இது எந்த நாடு?, அந்த நாட்டிற்கு எப்படி செல்வது? என வீடியோவின் கீழ் சிலர் கமெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சிலர் சொந்த லாபத்திற்காக இயற்கை வளத்தை அழிப்பதா என தங்களது கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.