OOSAI RADIO

Post

Share this post

100 வது போட்டியில் விளையாடும் 16 வது வீரர்!

இங்கிலாந்து அணிக்காக 100 வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரராக அந்த அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் மாறியுள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நேற்று (15) தொடங்கியது. இந்தப் போட்டி இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் விளையாடும் 100 வது டெஸ்ட் போட்டியாகும்.

இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 16 வீரர் என்ற சாதனையை பென் ஸ்டோக்ஸ் படைத்துள்ளார்.

ஒட்டுமொத்தமாக பார்க்கையில் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 76 வது வீரராக அவர் மாறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பென் ஸ்டோக்ஸ் 6,251 ஓட்டங்கள் (இந்தப் போட்டியை சேர்க்காமல்) குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter