OOSAI RADIO

Post

Share this post

பெரும் பொருளாதார ஆபத்து – எச்சரிக்கும் மத்திய வங்கி!

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் தடம்புரண்டால் பெரும் பொருளாதார ஆபத்து ஏற்படலாம் என இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

இது தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும், சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தினை முன்னெடுக்கமுடியாத நிலையேற்பட்டால் பெரும் பொருளாதார ஆபத்து ஏற்படலாம்.

உலகப் பொருளாதார வீழ்ச்சி காரணமாக ஏற்றுமதிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகளிற்கு மத்தியில் இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் தடம்புரண்டால் பெரும்பொருளாதார ஆபத்து ஏற்படலாம்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் வளர்ச்சி பாதிக்கப்பட்டமை, நம்பிக்கையின்மை முதலீட்டாளர்களின் எதிர்மறை உணர்வுகள் காரணமாக பெரும் பொருளாதார இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இலங்கை தனது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளது. பொருளாதார நடவடிக்கைகள் மீட்டெடுக்கப்படுகின்றன.

எனினும் குறுகிய காலத்திற்கு வளர்ச்சி குறைவானதாகவே காணப்படும் என தெரிவித்துள்ளது.

Leave a comment

Type and hit enter