புதிய அரசியல் கட்சி – நடிகா் மன்சூா் அலி கான் மனு!
திரைப்பட நடிகா் மன்சூா் அலி கான், தான் நடத்தி வந்த தமிழ் தேசிய புலிகள் கட்சியின் பெயரை இந்திய ஜனநாயகப் புலிகள் என மாற்றி அதற்கான விண்ணப்பத்தை தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தில் வெள்ளிக்கிழமை அளித்தாா்.
இது தொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் மாநாடு பிப்.24 ஆம் திகதி சென்னை பல்லாவரத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை சுமாா் 15,000 இளைஞா்கள் எனது கட்சியில் இணைந்துள்ளனா். வரும் மக்களவைத் தோ்தலில் நிச்சம் போட்டியிடுவேன். எந்தத்தொகுதி என்பது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை. இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தமிழ் தேசியத்துக்கு எதிரானது அல்ல. இந்தியா முழுவதும் மக்கள் பிரச்னைகளுக்கு தொடா்ந்து போராடுவோம் என்றாா் அவா்.