OOSAI RADIO

Post

Share this post

மன அழுத்தத்தை விரட்டும் 6 பழங்கள்!

இன்றைய துரித வாழ்க்கையில், மன அழுத்தம் என்பது பொதுவான பிரச்சனையாகிவிட்டது. மன அழுத்தத்தைப் போக்கும் இந்த பழங்களை தினமும் உணவில் சேர்த்தால் உற்சாகமாக இருக்கலாம்.

நீடித்த மன அழுத்தம் மன ஆரோக்கியத்தை மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். மன அழுத்தம் காரணமாக இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, சுவாசம், வளர்சி மாற்றம் ஆகிய அனைத்தும் பாதிக்கப்படுகிறது.

துரிதமான வாழ்க்கையில், அதிக போட்டி நிறைந்த உலகில் மன அழுத்தம் என்பது உலகம் முழுவதும் உள்ள பலருக்கு ஒரு முக்கிய கவலையாகவும் பிரச்சனையாகவும் உள்ளது. கவலை, மன அழுத்தம் ஆகியவை பல கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கிறது.

மன அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதில் பயனுள்ளதாக இருக்கும் சில பழங்களை தினமும் உணவில் சேர்த்தால் உற்சாகமாக இருக்கலாம்.

கொய்யா – வைட்டமின் சி நிறைந்த பழங்களை உட்கொள்வது மன அழுத்தத்தை குறைக்கிறது. கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி அதிகளவில் காணப்படுவதால், குளிர் காலத்தில் இதனை உட்கொள்வதன் மூலம், பல நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையையும் கூடுதலாக பெறலாம்

திராட்சை – திராட்சையில் நீர் சத்து, சோடியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இது மன அழுத்தத்தை போக்க சிறந்த வழி.

வாழைப்பழம் – பல வைட்டமின்கள், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் வாழைப்பழத்தில் காணப்படுகின்றன. மன அழுத்தத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது நன்மை பயக்கும். இதனுடன், அத்தகைய சூழ்நிலையில் வாழைப்பழத் தோலில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரையும் அருந்துவது நல்லது.

புளுபெரி – புளுபெரி எனப்படும் அவுரிநெல்லியில் வைட்டமின் சி, ஏ, பி, ஈ போன்றவை நிறைந்துள்ளன. இது மன அழுத்தத்தைப் போக்கி, உடலை வலுவாக வைத்திருக்கும் என்று ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், இது நியாபக சக்தியையும் அதிகரிக்கிறது

கிவி – கிவி மன அழுத்தத்தைப் போக்க வந்த வரம் எனக் கூறினால் மிகையில்லை.இதில் இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் நிறைந்துள்ளது. எனவே இந்த பழம் மன அழுத்தத்தை சமாளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆரஞ்சு – ஆரஞ்சு மன அழுத்தத்தை நீக்குகிறது. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இந்த பழம் மன அழுத்தத்தை நீக்குகிறது என்று ஒரு ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது.

Leave a comment

Type and hit enter