சில மாதங்களில் 76 ஆண்டு கால சாபம் நீங்கும்!
இன்னும் சில மாதங்களில் 76 ஆண்டுகால சாபம் நீங்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும், எட்டு மாத காலப் பகுதியில் மக்கள் விடுதலை முன்னணியின் யுகம் உருவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த அதிகார மாற்றத்திற்கு அஞ்சும் தரப்புக்கள் தற்பொழுது பல்வேறு சேறு பூசல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தமது கட்சிக்கான மக்கள் ஆதரவு வெகுவாக அதிகரித்துள்ளதாகவும் ஏனைய கட்சிகள் இந்த விடயம் தொடர்பில் அச்சமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.