OOSAI RADIO

Post

Share this post

மகிழ்ச்சியாக மக்கள் வாழும் பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு!

உலகின் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில் பின்லாந்து 6 ஆவது ஆண்டாகவும் முதலிடம் பிடித்துள்ளதாக ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

பின்லாந்தில் மக்கள் நிம்மதியாக வாழும் நாடு எனும் பெயரை 6 ஆண்டுகளாக தக்க வைத்துள்ளது. இதற்கு காரணம் இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைமுறை, அரசின் நடவடிக்கையும் என கூறப்படுகின்றது.

இந்நாட்டு மக்களுக்கு ஒற்றுமை உணர்வு அதிகம் இருப்பதனால் அவர்களுக்கு எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்த்து போராடும் வலிமையை கொடுக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது.

தங்களை சுற்றியுள்ள நபர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று இந்நாட்டு மக்கள் சிறுவயதில் இருந்தே கற்பிக்கப்படுகின்றனர்.

அனைவரிடமும் நட்புடன் பழக வேண்டும் என்று கூறுவதால், பின்லாந்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்துகின்றனர்.

பின்லாந்து மக்கள் தங்கள் அண்டை வீட்டாருடன் நேரம் செலவிட்டு, மகிழ்ச்சியாக இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.

அத்துடன் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பின்லாந்து அரசு உடனடியாக செயல்படுவதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை பின்லாந்தில் அதிகமாக சம்பாதிப்பவர்களுக்கும், குறைவாக சம்பாதிப்பவர்களுக்கும் வித்தியாசம் பார்க்கப்படாமல் அனைவரும் சமமாக நடத்தப்படுகின்றனர்.

இந்நாட்டில் ஏழ்மை இல்லை என்பதுடன், ஊழல் குறைவாகவே இருப்பதும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு முக்கிய காரணமாக அமையபெற்றுள்ளது.

Leave a comment

Type and hit enter