இலங்கைக்கு 2027 வரை மட்டுமே கடன்!
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதை மாத்திரமே அரசாங்கம் பிரதான இலக்காகக் கொண்டுள்ளது. 2027ஆம் ஆண்டு வரை மாத்திரமே இலங்கைக்கு கடன் கிடைக்கும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரவிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை மாத்திரம் வைத்துக் கொண்டு சமகால பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.
நிலையான ஸ்திரத்தன்மைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பரிநதுரைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் செயற்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ள இலக்கு திட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமற்றது.
ஆகவே முன்வைக்கப்பட்டுள்ள செயற்திட்டங்களை மீளாய்வு செய்ய வேண்டும். சர்வதேச நாணய நிதியத்திடம் இருநு்து கடன் பெறுவதை மாத்திரமே அரசாங்கம் பிரதான இலக்காகக் கொண்டுள்ளது. 2027ஆம் ஆண்டு வரை மட்டுமே கடன் கிடைக்கும்.
வீழ்ச்சியடைந்துள்ள தேசிய சேவை மற்றும் கைத்தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு அவதானம் செலுத்துவோம்.
பொருளாதார மீட்சிக்கான திட்டங்களை எவரும் முன்வைக்கவில்லை என்று ஜனாதிபதி குறிப்பிடுவதில் உண்மையில்லை.
நாங்கள் முன்வைத்த திட்டங்களை செயற்படுத்த அவர்கள் தயாரில்லை. அத்துடன் பொருளாதாரத்தை இல்லாதொழித்தவர்களால் ஒருபோதும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார்.