தாய், மகள் கொலை – குற்றவாளிக்கு மரண தண்டனை!
கொட்டகெத்தனவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து இரத்தினபுரி மேல் நீதிமன்றம் திங்கட்கிழமை (19) தீர்ப்பளித்தது.
கொட்டகெத்தன பிரதேசத்தில் தாய் மற்றும் மகள் இரட்டைக் கொலைச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நீல் லக்ஷ்மன் என்பவருக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012ஆம் ஆண்டு குறித்த கொலச் சம்பவம் இடம்பெற்ற நிலையில், 12 ஆண்டுகளின் பின்னர் சந்தேக நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.