OOSAI RADIO

Post

Share this post

ROOM க்கு அழைத்து சில்க் ஸ்மிதா – கடுப்பாகிய பிரபல நடிகை!

மலையாள சினிமாவில் கவர்ச்சி புயலாக தன்னுடைய சிறு வயதில் நடிக்க ஆரம்பித்தவர் நடிகை ஷகீலா. அதன்பின் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை ஷகீலா, சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

மேலும் பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டில் புகைப்பிடித்து சர்ச்சையை ஏற்படுத்தி வெளியேறினார்.

அதன்பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து பேட்டிகளை கொடுத்தும் வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ஆரம்பகாலத்தில் சில்க் ஸ்மிதாவுடன் ஒரு படத்தில் நடித்திருந்த போது ஒரு காட்சியில் சில்க் ஸ்மிதா ஷகீலாவை நிஜமாகவே கன்னத்தில் அறைந்துவிட்டதாகவும் இதுகுறித்து ஏன் அப்படி அடிக்கிறார் என்று இயக்கினரிடம் புகாரளித்தும் இருக்கிறார்.

அதற்கு சில்க் ஸ்மிதா கூறியது, நான் உன்னை அடித்தது வலிக்கிறதா, ஒன்னும் இல்லை, வெறும் பாவாடை மட்டும் கட்டிக்கிட்டு நீ நின்னுட்டு இருந்தியா, சீன் ஒழுங்கா வரவில்லை என்றால் ரீடேக் போய்விடுவார்கள். உனக்குத்தான் கஷ்டமா இருக்கும்.

அதனால் தான் ஒரே டேக்கில் ஓகே ஆகவேண்டும் என்று நிஜமாகவே அடித்ததாக சில்க் ஸ்மிதா கூறியிருக்கீறார். அப்படி இருந்தும் பல பேர் இருக்கும் முன் அடித்துவிட்டு யாரும் இல்லாத தனிமையான சூழலில் மன்னிப்பு கேட்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை என்று ஷாகீலா ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter