OOSAI RADIO

Post

Share this post

இலங்கையில் மாணவர்களை குறி வைக்கும் கஞ்சா கலந்த பானங்கள்!

அளுத்கம பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கஞ்சா கலந்த போதைப்பொருட்களை விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அளுத்கம பிரதான பாடசாலையொன்றின் மாணவர்கள் சிலர் போதைப்பொள் கலந்த பானங்களை குடிப்பதாக அளுத்கம பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் அளுத்கம நகரில் உள்ள கடையொன்றின் உரிமையாளரை விசேட பொலிஸ் குழுவினர், முகவராகப் பயன்படுத்திச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது நகரின் பிரதான பாடசாலைக்கு அருகாமையில் இயங்கி வந்த கடையில், கஞ்சா கலந்த பானங்கள் விற்பனை செய்வதாகத் தெரிய வந்துள்ளது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இவர் கைதானதுடன் அந்தக் கடையில் கஞ்சா கலந்த சுமார் 500 பானங்கள் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

Leave a comment

Type and hit enter