சீரியல் மற்றும் பட நடிகர் மாரடைப்பால் உயிரிழப்பு!
தமிழ் சினிமாவில் மற்ற மொழி நடிகர்கள் பலரும் நடிக்கிறார்கள். நாயகிகளை எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்களை தாண்டி வேறு மாநிலத்தில் இருந்து வந்தவர் தான் அதிகம் நடிக்கிறார்கள்.
அப்படி பாலிவுட் சினிமாவில் நிறைய முன்னணி சீரியல்கள், OTT வெப் சீரிஸ் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ரித்துராஜ் சிங். இவர் தமிழில் அஜித்தின் துணிவு படத்தில் ஒரு முக்கிய காட்சியில் நடித்துள்ளார்.
59 வயதாகும் இவர் கணைய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலன்இன்றி இன்று காலை உயிரிழந்துள்ளார்.