OOSAI RADIO

Post

Share this post

சம்பள அதிகரிப்பை கட்டுப்படுத்த முடியாது!

இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பை நிதி அமைச்சால் கட்டுப்படுத்தவும் முடியாது, தலையிடவும் முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் (20.09.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை மத்திய வங்கி சுயாதீனமாக செயற்படுகிறது. ஒப்பந்தத்துக்கு அமைய மத்திய வங்கியின் அதிகாரிகள் மற்றும் சேவையாளர்களின் சம்பளம் மூன்று வருடத்துக்கு ஒருமுறை அதிகரிக்கப்படுகிறது.

ஆகவே இந்த சம்பள அதிகரிப்பை நிதி அமைச்சால் கட்டுப்படுத்தவும் முடியாது, தலையிடவும் முடியாது. சம்பள அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை மத்திய வங்கியின் பரிபாலன சபையே எடுக்கும்.

மத்திய வங்கியில் பொருளாதார நிபுணர்கள் உயர் பதவிகளில் உள்ளதால் நடைமுறைக்கு சாத்தியமான வகையில் சம்பளம் அதிகரிக்கப்படுகிறது. கூட்டு நிதியத்தின் ஊடாக சம்பளம் வழங்கப்படுவதில்லை.

மத்திய வங்கியின் கணக்குகள் ஊடாகவே சம்பளம் வழங்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment

Type and hit enter