த்ரிஷா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் 1987 இல் வெளியான ‘நாயகன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து 35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைகிறது.
தக் லைஃப் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ், கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செர்பியாவில் நடைபெறுகிறது. இதற்காக, இயக்குநர் மணிரத்னம் செர்பியா கிளம்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், நடிகை த்ரிஷா தக் லைஃப் படப்பிடிப்பில் தனக்கான காட்சிகளின் ‘சீன் பேப்பர்’ புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இதனால், த்ரிஷா தக் லைஃப் படப்பிடிப்பில் இணைந்துள்ளது உறுதியாகியுள்ளது.