OOSAI RADIO

Post

Share this post

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி இன்று (22) நாணயமாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன்படி இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 306.53 ரூபாவாகவும், விற்பனை வீதம் 316.06 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 307.14 ரூபாவாகவும், விற்பனை வீதம் 316.81 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

ஸ்ரேலிங் பவுனின் கொள்முதல் வீதம் 385.48 ரூபாவாகவும், விற்பனை வீதம் 401.28 ரூபாவாகவும் காணப்படுகிறது.

இதேவேளை குவைட் தினாரின் பெறுமதி 1012.93 ரூபாவாக பதிவாகியுள்ளது.

Leave a comment

Type and hit enter