OOSAI RADIO

Post

Share this post

விரைவில் X தளத்தில் மின்னஞ்சல்!

எக்ஸ் மெயில் என்ற பெயரில் விரைவில் மின்னஞ்சல் சேவை அறிமுகப்படுத்தப்படும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பரில் அந்த நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரர் இடத்தில் இருந்து கீழே தள்ளப்பட்டார்.

இவர் டெஸ்லா, ஸ்பேக்ஸ் எக்ஸ், போரிங் கம்பெனி பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். டெஸ்லா கார்கள் வெளியான சில நாள்களிலேயே டெஸ்லாவின் பங்குகள் பல மடங்கு உயர்ந்ததால் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற பெருமையை பெற்றிருந்தார்.

பின்னர், ட்விட்டர் நிறுவனத்தை இவர் அதிக விலை கொடுத்து வாங்கியதால் தனது முதல் இடத்தை இழந்தார்.

தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் எலான் மஸ்க் தான் விட்ட இடத்தை மீண்டும் கைப்பற்றினார்.

இந்த ஆண்டு வரை அதனை தக்கவும் வைத்துக்கொண்டார்.

அண்மையில், பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலாஸ் மஸ்க்கை பிரெஞ்சு தொழிலதிபர் பெர்னார்ட் அர்னால்ட் பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார்.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் ஜிமெயிலுக்கு போட்டியாக எக்ஸ் மெயில் என்ற பெயரில் மின்னஞ்சல் வசதியை எலான் மஸ்க் விரைவில் அறிமுகம் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜிமெயில் தனது சேவையை நிறுத்த உள்ளதாக பயனர்களுக்கு செய்திகள் அனுப்பியுள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில் எக்ஸ் மெயில் சேவை தொடங்கப்படும் என்ற தகவல் பயனர்களுக்கு ஒரு புறம் அதிர்ச்சியையும், மறுபுறம் சந்தோசத்தையும் தருவதாக நெட்டிசன்கள் பதிவிட்டுவருகின்றனர்.

Leave a comment

Type and hit enter