‘உண்மையான நாயகன்’ – மாற்றுத்திறனாளி சந்தித்த சச்சின்! (Video)
To Amir, the real hero. Keep inspiring!
It was a pleasure meeting you. pic.twitter.com/oouk55lDkw— Sachin Tendulkar (@sachin_rt) February 24, 2024
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், மாற்றுத்திறனாளி கிரிக்கெட்டர் ஆமிர் ஹொசைனைச் சந்தித்தார். சமீபத்தில் இரு கைகள் இல்லாத 34 வயதான மாற்றுத்திறனாளி ஒருவர் கழுத்தினை வைத்து பேட்டிங்கும் கால்களை வைத்து பந்து வீச்சும் செய்து அசத்தினார்.
இந்த விடியோ வைரலானதைத் தொடர்ந்து சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில், “முடியாததை முடித்து காட்டியிருக்கிறார் ஆமிர். இதைப் பார்க்கும்போது மிகவும் நெகிழ்ச்சியடைந்தேன். விளையாட்டின்மீது அவருக்கு இருக்கும் ஆர்வமும் அர்ப்பணிப்பும் அதிகம். ஒருநாள் அவரைச் சந்தித்து அவரிடம் இருந்து ஜெர்ஸி வாங்குவேன். விளையாட்டின் மீது ஆர்வமாக இருக்கும் பல லட்சக்கணக்கானவர்களை ஊக்கப்படுத்தியிருக்கிறார்” எனக் கூறியிருந்தார்.