அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய செய்தி!

பிரபல பாடகரும், கஸல் கலைஞருமான பங்கஜ் உத்ஹாஸ் (72) உடல்நலக் குறைவால் திங்களகிழமை காலமானாா்.
கடந்த 1980 இல் அஹாத் என்ற கஸல் ஆல்பத்தை உருவாக்கி தனது பயணத்தை தொடங்கிய பங்கஜ் உத்ஹாஸ், மகேஷ் பட்டின் ‘நாம்’ திரைப்படத்தில் பிரபலமான சிட்டி ஆயி ஹை உள்ளிட்ட பிரபல பாடல்களை பாடியவா்.
அவரது சிறந்த செயல்பாட்டுக்காக கடந்த 2006 இல் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டாா். நீண்ட காலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவா் மருத்துவமனையில் காலமானாா்.
அவருக்கு மனைவி ஃ பரீடா, மகள்கள் ரேவா, நயாப் உள்ளனா். அவரது இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை மும்பையில் நடைபெறுகிறது. பங்கஜ் உத்ஹாஸின் மறைவுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா்.