OOSAI RADIO

Post

Share this post

இலங்கையில் 1 மணி நேரத்தில் 20,000/= பெறும் பெண்!

கொழும்பு – ஹைட் பார்க் பகுதியில் 3 பிள்ளைகளுடன் யாசகம் பெற்ற போது கைது செய்யப்பட்ட பெண் சுமார் ஒரு மணித்தியாலத்தில் கிட்டத்தட்ட 20,700 ரூபாவை சம்பாதித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, அந்த விடயம் தெரியந்துள்ளது.

குறித்த பெண்ணின் பாதுகாப்பில் இருந்த 2 சிறுவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்புமாறு நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.

அதற்கமைய, பாடசாலை செல்லும் வயதுடைய 2 பிள்ளைகளும் மீரிகம – மகாபோதி பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

2 வயது மதிக்கத்தக்க மற்றைய குழந்தையின் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய நிலையில் மொரட்டுவை – பிரேமா சிறுவர் இல்லத்திற்கு மாற்றுமாறு நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டது.

பெண் ஒருவர் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த பெண்ணையும் அவரது மூன்று பிள்ளைகளையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாசகம் பெறும் பெண்ணும் மூன்று பிள்ளைகளும் கொழும்பு ஹைட் பார்க் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ​​முறைப்பாடு செய்த பெண் ஒரு குழந்தைக்கு நன்கொடை அளித்துள்ளார்.

அந்த பணத்தையும் யாசகம் பெறும் பெண் பெற்றுக் கொண்டதனால் இந்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

எனினும் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​யாசகம் பெறும் பெண்ணையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதையடுத்து, அவரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave a comment

Type and hit enter