OOSAI RADIO

Post

Share this post

சம்பள அதிகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது!

மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் நேற்றைய தினம் அமைச்சரவையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மகிந்த அமரவீர மேலும் தெரிவிக்கையில், நாட்டின் தற்போதைய நிலையில் மத்திய வங்கியின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதை எவ்விதத்திலும் அனுமதிக்கமுடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இந்த சம்பள அதிகரிப்புக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் எதிர்க்கட்சி மட்டுமன்றி ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

மத்திய வங்கியின் நிர்வாகத்திற்கு சுயாதீனமாக அவர்களது சம்பளத்தை அதிகரித்துக் கொள்வதற்கான அதிகாரம் கிடையாது என பொதுஜன பெரமுன எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதற்காக பின்பற்றப்படும் நடைமுறையை அனுமதிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் பலர் தெரிவித்து வருகின்றனர்.

அதேவேளை சம்பள அதிகரிப்பை மேற்கொண்டமை தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கான சந்தர்ப்பமொன்றை வழங்குமாறு நிதியமைச்சு மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மத்திய வங்கியின் ஆளுநர் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter