OOSAI RADIO

Post

Share this post

கிரிக்கெட் விதிமுறையை மாற்ற கோரிக்கை!

வேகப் பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக லெக் திசையில் பௌன்சர்கள் வீசுவது தொடர்பாக கிரிக்கெட் விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலிய அணி நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

முதல் இன்னிங்ஸில் விளையாடி வரும் அவுஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 279 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இந்த நிலையில், வேகப் பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக லெக் திசையில் பௌன்சர்கள் வீசுவது தொடர்பாக கிரிக்கெட் விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: லெக் திசையில் பந்துவீசுவதில் சிறிய அளவில் விதிமுறை மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என நினைக்கிறேன். மிகவும் லெக் திசையில் வீசப்படும் பௌன்சர்களை விளையாடுவது கடினம். வேகப் பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக லெக் திசையில் பந்துகளை வீசும்போது அவர்களுக்கு நடுவர்கள் எச்சரிக்கை கொடுக்க வேண்டும். மீண்டும் அவர்கள் அவ்வாறு பந்துவீசினால் அதனை அகலப் பந்து (வைடு பால்) என அறிவிக்க வேண்டும் என்றார்.

Leave a comment

Type and hit enter