வைரலாகும் ரஜினிகாந்தின் புகைப்படம்!

வடபழனியில் உள்ள ஏவிஎம் நிறுவனத்தின் ஸ்டுடியோவில் ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம் என்கிற பெயரில் பாரம்பரிய திரைப்படக் கருவிகள் மற்றும் பொருள்களைக் கொண்ட அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் பழைமையான திரைப்படக் கேமராக்கள், எடிட்டிங் யூனிட்டுகள், புரொஜெக்டா்கள், லைட்டுகள், பெரும் நடிகா்கள் பயன்படுத்திய வாகனங்கள், ஆடைகள், ஏவிஎம் தயாரித்த படங்களின் புகைப்படங்கள், விளம்பரங்கள் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஏவிஎம் நிறுவனத்தைச் சாா்ந்த எம்.எஸ்.குகன் சேகரித்த பழைமையான காா்களும், இருசக்கர வாகனங்களும் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பாயும் புலி படத்தில் தான் படத்திய பைக்குடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது, ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியம் வெளியிட்ட இப்புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
