OOSAI RADIO

Post

Share this post

இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்ட சம்பளம்!

இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் அண்மைய சம்பள அதிகரிப்பு தொடர்பில் விசாரணை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று (01) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மார்ச் 5 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை விசாரணைக்காக அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

70 வீதமாக மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் மட்டத்தில் இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் இந்த விவகாரம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter