OOSAI RADIO

Post

Share this post

உணவகத்தில் குண்டு வெடிப்பு! (CCTV காட்சிகள்)

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ராமேஸ்வரம் கபே யில் குண்டு வெடித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ‘ராமேஸ்வரம் கபே’ என்ற உணவகம் உள்ளது. இன்று திடீரென பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்தது.

இச்சம்பவத்தில் 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெடித்தது குண்டு தான் என பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சி பதிவை பொலிஸார் வெளியிட்டு உள்ளனர். குண்டு வைத்த நபர் குறித்து கர்நாடகா பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

CCTV footage of blast in Rameshwaram Cafe in Bengaluru. pic.twitter.com/NDSkpKvzkx— Anshul Saxena (@AskAnshul) March 1, 2024

Leave a comment

Type and hit enter