OOSAI RADIO

Post

Share this post

சமூக வலைதளங்களுக்கு தடை – பாராளுமன்றத்தில் இன்று!

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் அனைத்துக்கும் நிரந்தரத் தடை விதிக்கக் கோரும் தீா்மானம் மீது பாராளுமன்ற மேலவையில் திங்கள்கிழமை (மாா்ச் 4) விவாதம் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் மேலவை உறுப்பினரான பஹ்ராமண்ட் கான் மேலவையில் ஒரு தீா்மானம் கொண்டுவந்துள்ளாா்.

அதில், இளைஞா்களின் எதிா்கால வாழ்க்கைக்கு சமூக ஊடகங்கள் கேடு விளைவிக்கின்றன. மதம், நாட்டின் கலாசாரத்துக்கு எதிரான பிரசாரத்துக்கும், ஆயுதப் படைக்கு எதிரான தீங்கிழைக்கும் பிரசாரத்துக்கும் அவை பயன்படுத்தப்படுகின்றன.

எனவே, ஃபேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், யூடியுப் போன்ற சமூக ஊடக தளங்களுக்கு நிரந்தரத் தடை விதிக்க அரசுக்கு மேலவை பரிந்துரை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளாா். இந்தத் தீா்மானம் விவாதத்துக்காக மேலவையின் திங்கள்கிழமை அலுவலில் பட்டியலிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பாராளுமன்றத் தோ்தலை ஒத்திவைக்க வேண்டும் என மேலவையில் பஹ்ராமண்ட் கான் ஏற்கெனவே ஒரு தீா்மானம் கொண்டுவந்தாா்.

இதையடுத்து, பாகிஸ்தான் மக்கள் கட்சியிலிருந்து அவா் நீக்கப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் பாராளுமன்றத் தோ்தல் திட்டமிட்டபடி பெப். 8 ஆம் திகதி நடைபெற்றது.

Leave a comment

Type and hit enter