உணவு பொருட்களின் விலைகள் குறைப்பு!
உணவு பொருட்களின் விலைகளை இன்று (05) நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 1 கோப்பை தேநீர் 5 ரூபாவாலும், 1 கோப்பை பால் தேநீர் 10 ரூபாவாலும், சிற்றுண்டிகள் 10 ரூபாயினாலும் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சாப்பாடு பொதி ஒன்று 25 ரூபாவாலும் கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியன 50 ரூபாயினாலும் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.