OOSAI RADIO

Post

Share this post

Ball Boy ஐ கட்டிப்பிடித்து தூக்கிய கொலின் மன்றோ!

பாகிஸ்தான் சூப்பர் லீக் 2024 டி20 கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் 4 ஆம் திகதி நடந்தது. இந்த ஆட்டத்தில்  இஸ்லாமாபாத் யுனைடெட் 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெஷாவர் சல்மியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியின் போது சுவாரசியமான சம்பவம் இடம்பெற்றது. 7 ஆவது ஓவரின் கடைசி பந்தில், இஸ்லாமாபாத் வேகப்பந்து வீச்சாளர் பஹீம் அஷ்ரப் வீசிய பந்தை சல்மியின் அமீர்ஜமால் எதிர் கொண்டார். 

பந்து சிக்சர் நோக்கி பாய்ந்து சென்றது .அப்போது பீல்டர் கொலின் மன்ரோ பாய்ந்து சென்று பந்தை பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் பந்து, எல்லையை தாண்டி சென்றது. அப்போது அந்த பந்தை பால் பாய் ஒருவர் லாவகமாக கேட்ச் செய்தார். 

இந்த காட்சியை பார்த்ததும் தன்னை அறியாமல் அந்த சிறுவனை கட்டிப்பிடித்து தூக்கி கொலின் மன்ரோ மகிழ்ச்சி அடைந்தார்.இந்த காட்சி தொடர்பான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. 

Leave a comment

Type and hit enter