217 முறை தடுப்பூசி பெற்ற நபர்!
ஜேர்மனியில் 62 வயதான ஒருவருக்கு மருத்துவ ஆலோசனையை மீறி 217 முறை கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவலை வௌியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் “The Lancet Infectious Diseases” என்ற இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசி டோஸ்கள் தனிப்பட்ட முறையில் கொள்வனவு செய்யப்பட்டு 29 மாதங்களுக்குள் செலுத்தப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை ஆய்வு செய்த நிபுணர்கள், அந்த நபர் இவ்வளவு பெரிய டோஸ்கள் எடுத்தாலும், அவருக்கு இதுவரை எந்தவித பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளனர்.