OOSAI RADIO

Post

Share this post

VAT வரி நீக்கம் – ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

எதிர்காலத்தில் வற் வரியை மேலும் குறைக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி, புத்தகங்கள், பாடசாலை உபகரணங்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கும் VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (06) விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், வீழ்ச்சி அடைந்திருந்த பொருளாதாரம் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதாகவும் அது சிரமமானதாக இருந்தாலும், நாளுக்கு நாள் பொருளாதாரம் வலுவடையும் எனத் தெரிவித்திருந்தார்.

அத்துடன் நாட்டின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து மீள் எழுச்சி பெற ஆரம்பித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்

2024 ஆம் ஆண்டில் 2% – 3% பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என சர்வதேச நிதி நிறுவனங்கள் கணித்துள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter