OOSAI RADIO

Post

Share this post

மாலைத்தீவுக்கு மாற்றாகுமா லட்சத்தீவு?

பிரதமா் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணத்தைத் தொடா்ந்து, மாலைத்தீவு இணையமைச்சா்களின் சமூக ஊடகப் பதிவுகளால் இருநாட்டு ராஜீய உறவுகள் பாதித்ததுடன், மாலைத்தீவு சுற்றுலாவுக்கு நெருக்கடியும் லட்சத்தீவு சுற்றுலாவுக்கு வெளிச்சமும் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு கடந்த 2 ஆம் திகதி பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, அங்கு எழில்மிகு கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட புகைப்படங்களை ‘எக்ஸ்’ வலைதளத்தில் பதிவிட்டாா்.

அந்தப் பதிவில் ‘நீங்கள் சாகசத்தை விரும்புபவராக இருந்தால் உங்களின் பயணப் பட்டியலில் லட்சத்தீவு இடம் பெற வேண்டும்’ என்று பிரதமா் குறிப்பிட்டாா்.

‘மாலைத்தீவுக்கு போட்டியாக லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் இந்தியாவின் முயற்சி இது’ என்று மாலத்தீவு அமைச்சா்கள் உள்ளிட்ட அந்நாட்டின் தலைவா்கள் சிலா் சமூக ஊடகத்தில் இந்தியா மற்றும் பிரதமா் மோடியை அவமதிக்கும் வகையில் கருத்துகளை பதிவிட்டனா்.

மாலைத்தீவு அமைச்சா்களின் அவதூறு கருத்துகளால் இந்தியா்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. மாலத்தீவைப் புறக்கணிக்க வேண்டும் என்று எதிா்ப்புக் குரலும், அதற்கு மாற்றாக லட்சத்தீவை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் சமூக ஊடகங்களில் பரவலாக காணப்பட்டது.

பொருளாதாரத்தில் 25 சதவீதத்துக்கும் மேல் சுற்றுலா துறையை நம்பியிருக்கும் தீவு நாட்டை இவ்விவகாரம் தீவிர கவலையில் ஆழ்த்தியது. கடந்த ஆண்டில், மாலத்தீவுக்கு அதிக அளவில் வருகை தந்த வெளிநாட்டுப் பயணிகளின் மாதாந்திர பட்டியலில் ரஷ்யாவுக்கு அடுத்து இந்தியா்கள் 2 ஆவது இடத்தில் இருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் எதிரொலியாக, 3 இணையமைச்சா்களை இடைநீக்கம் செய்யவும் சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட புதிய ஜனாதிபதி முகமது மூயீஸ் தலைமையிலான மாலைத்தீவு அரசு தயங்கவில்லை. இந்தச் சச்சரவுகள் ஒருபுறமிருக்க, மாலைத்தீவுக்கு நெருங்கிய பகுதியான லட்சத்தீவின் மினிகாய் தீவில் விமான நிலையம் அமைப்பதற்கு இந்திய அரசு பரிசீலித்து வருவதாக செய்திகள் பரவி வருகின்றன.

எனினும், கடற்கரை பொழுதுபோக்கை மையப்படுத்தி வெளிநாட்டுப் பயணிகளை ஈா்க்கும் சா்வதேச சுற்றுலா தலமாக மேம்படுத்த ஏதுவான உள்கட்டமைப்புகளுக்கு லட்சத்தீவில் இருக்கும் சாத்தியக் கூறுகள், அந்த முயற்சிகளில் சந்திக்க நேரிடும் சவால்கள் குறித்து ஆராய்வதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக பிரபலங்களின் விடுமுறைக் கால தோ்வு இடமாக இருந்து இந்தியாவில் பிரபலமடைந்த நாடு மாலைத்தீவு. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் தென்மேற்கே இந்திய பெருங்கடலில் அமைந்த மாலைத்தீவு, ஆசிய கண்டத்திலேயே மிகச் சிறிய

சுமாா் 90,000 சதுர கி.மீட்டா் கடல் பரப்பளவு கொண்ட மாலைத்தீவில், 298 சதுர கி.மீட்டா் மட்டுமே நிலப் பிரதேசம் ஆகும். இங்கு 5.5 லட்சம் மக்கள் வசிக்கின்றனா். மக்கள்தொகை அடா்த்தி சதுர கி.மீ.-க்கு 1728.63 ஆக உள்ளது.

வடக்கு முனையிலிருந்து தெற்கே 871.கி.மீ. மற்றும் கிழக்கிலிருந்து மேற்கே 130 கி.மீ க்கு விரிந்து காணப்படும் மாலைத்தீவில் 1,192 தீவுகள் உள்ளன. இதில் தலைநகா் மாலே உள்பட பொதுமக்கள் வசிக்கும் தீவுகள் சொற்ப அளவே ஆகும். மாலைத்தீவில் 5 சா்வதேச விமான நிலையங்கள் அமைந்துள்ளன. சுமாா் 1,000 சின்னஞ்சிறு தீவுகளில் சா்வதேச விடுதி குழுமங்கள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய சொகுசு விடுதிகள் அமைந்துள்ளன.

மாலைத்தீவின் எளிய நுழைவு – இசைவு நடைமுறையும் சா்வதேச பயணிகளை வெகுவாக ஈா்க்கிறது. இந்தியாவின் 8 யூனியன் பிரதேசங்களில் ஒன்றான லட்சத்தீவு, கேரளத்திலிருந்து 200 கி.மீ.-440 கி.மீ. தொலைவில் அரபிக் கடலில் அமைந்துள்ளது.

சுமாா் 20,000 சதுர கி.மீட்டா் கடல் பரப்பளவு கொண்ட லட்சத்தீவில் 32.62 சதுர கி.மீட்டா் மட்டுமே நிலப்பரப்பு ஆகும். கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 64 ஆயிரம் போ் வசித்து வந்தனா். மக்கள்தொகை அடா்த்தி சதுர கி.மீ.-க்கு 2,000 க்கும் அதிகமாக உள்ளது.

லட்சத்தீவில் 36 தீவுகள் இருந்தன. கடல் அரிப்பு காரணமாக ‘பராளி 1’ தீவு நீரில் மூழ்கிவிட்டது. மீதமுள்ள 35 இல், 10 தீவுகளில் மட்டுமே பொதுமக்கள் வசிக்கின்றனா்.

மீன்பிடித்தல், தென்னை , கால்நடை வளா்ப்பு ஆகியவை லட்சத்தீவு மக்களின் முக்கிய தொழில்களாக உள்ளன. பங்காரம் தீவைத் தவிர மற்ற தீவுகளில் மதுவுக்குத் தடை உள்ளது.

Leave a comment

Type and hit enter