மைதானத்திவ் நடனம் ஆடிய சச்சின், சூர்யா, ராம் சரண், அக்ஷய்! (வீடியோ)
சென்னை, ஐதராபாத், பெங்களூரு, மும்பை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கும் டி10 தொடர் இந்தியாவில் இன்று தொடங்குகிறது.
இந்த தொடர் ஐஎஸ்பிஎல் என்கிற பெயரில் நடத்தபடுகிறது. இந்த போட்டி 10 ஓவர்களை கொண்டது. இந்த போட்டிகள் முழுவதும் டென்னிஸ் பந்தில் தான் நடத்தப்பட உள்ளது.
மார்ச் 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த ஐ.எஸ்.பி.எல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியையும் சினிமா பிரபலங்கள் வாங்கி வருகின்றனர். அந்த வகையில் மும்பை அணியை அமிதாப் பச்சனும், பெங்களூரு அணியை பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஸ்ரீநகர் அணியை அக்ஷய் குமாரும், ஐதராபாத் அணியை தெலுங் நடிகர் ராம்சரணும் வாங்கினர்.
இந்த தொடரின் முதல் போட்டியில் அமிதாப் பச்சன் அணியும் அக்ஷய் குமார் அணியும் மோதுகின்றனர். இதன் தொடக்க விழாவில் சச்சின், ராம் சரண், சூர்யா, அக்ஷய் குமார் ஆகியோர் உலக அளவில் பிரபலமான நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கு நடிகர் ராம்சரணும் வாங்கினர்.