OOSAI RADIO

Post

Share this post

இலவச பொருட்களுக்கு தடை!

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்னும் சலுகையை பிரான்ஸ் அரசாங்கம் தடைசெய்துள்ளது.

உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்கும் ஒரு சலுகையான இதனை பன்னாட்டு நிறுவனங்களின் சலுகை விற்பனை காரணமாக பாதிக்கப்படும் சிறிய நிறுவனங்களை பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அந்நாட்டில் பல்பொருள் அங்காடிகள், குறிப்பிட்ட சில பொருட்களுக்கு 34 சதவிகிதத்துக்குமேல் தள்ளுபடி வழங்க முடியாது என கூறப்படுகிறது.

இதன்படி குறிப்பிட்ட சில பொருட்களுக்கு 34 சதவிகிதத்துக்குமேல் தள்ளுபடி வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்னும் ஒரு சலுகை இனி அந்த பொருட்களுக்குக் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமானது மார்ச் மாதம் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உணவுப்பொருட்கள் மீதான இத்தகைய கட்டுப்பாடு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘தள்ளுபடி அறிவிப்பதால், பொருளின் உண்மையான விலை என்ன என்பது வாடிக்கையாளர்களுக்கு தெளிவாகத் தெரியும் நிலை உருவாவதுடன், தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்காக கடைக்கு வரும் நிலையில், தள்ளுபடியில் கிடைக்கிறது என்பதற்காக தேவைப்பட்ட பொருட்களை விட ஆசைப்படும் பொருட்களை எல்லாம் அத்தியாவசிய அல்லது உடனடித் தேவையிலாமல் வாங்கிக் குவிப்பது இதனால் தவிர்க்கப்படும்” என அந்நாட்டு மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Leave a comment

Type and hit enter