OOSAI RADIO

Post

Share this post

பெண்ணாக பிறப்பது குற்றம்?

கான்பூரில் உள்ள கட்டம்பூர் பகுதியைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் வேலை செய்து கொண்டிருந்த செங்கல் சூளைக்கு அருகில் உள்ள வயல்வெளியில் 2 சிறுமிகள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த சிறுமிகள் செங்கல் சூளை ஒப்பந்ததாரர் ராம்ரூப் நிஷாத் (48), அவரது மகன் ராஜு (18), மருமகன் சஞ்சய் (19) ஆகியோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட உண்மை வெளிவந்தது.

குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் அவரது தந்தையை மிரட்டியதைத் தொடர்ந்து மூவரும் தற்கொலை செய்து கொண்டனர். கான்பூரில் கூட்டு பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, காட்டாட்சியில் பெண்ணாக பிறப்பது குற்றமாகிவிட்டது என உத்தர பிரதேச அரசை காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது: கான்பூரில் இரண்டு சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மிரட்டப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சமரசமாக போகும்படி பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த சிறுமிகளின் தந்தையும் தற்கொலை செய்து கொண்டது வேதனையின் உச்சம்.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் நீதி கேட்டால் அவர்களின் குடும்பங்களை முற்றிலுமாக அழித்தொழிப்பதுதான் உத்தர பிரதேசத்தின் சட்டமாகி விட்டது. இங்கு, பெண்ணாக பிறப்பதே குற்றம் என்றாகிவிட்டது என தெரிவித்துள்ளார். ராகுல் வேதனை

இதேபோன்று, இந்த சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இரட்டை இன்ஜின் அரசுகளிடம் நீதி கேட்பது என்பது குற்றமாக மாறி உள்ளது. இந்த அநீதிக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், இந்த தீ இன்று இல்லை என்றாலும் நாளை உங்களுக்கும் பரவும் என தெரிவித்துள்ளார்.

Leave a comment

Type and hit enter