OOSAI RADIO

Post

Share this post

இலங்கையில் வாகன பதிவில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2023 ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மோட்டார் வாகனங்களின் பதிவு 23.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய வங்கியின் அறிக்கையின் படி இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் 19,218 வாகனங்களும், 2023 ஆம் ஆண்டில் 23,698 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மோட்டார் சைக்கிள்களின் பதிவும் அதிகரித்துள்ளது.

2022 ஆம் ஆண்டில் மோட்டர் சைக்கிள் பதிவுகள் 8,363 ஆக இருந்துள்ள நிலையில் இது கடந்த ஆண்டு 16,869 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கடந்த வருடம் 636 பேருந்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter