OOSAI RADIO

Post

Share this post

உலகக் கிண்ண தொடரில் இருந்து விலகிய முகமது சமி!

அண்மையில் நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி 3 போட்டிகளில் முகமது சமி விளையாடுவார் என கூறப்பட்டது. ஆனால் காயம் குணமடையாததால் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து சமி விலகினார்.

இதனை அடுத்து அறுவை சிகிச்சை செய்வதற்காக சமி ஜனவரி மாதம் லண்டன் சென்றார். இந்நிலையில் கணுக்கால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் இந்தாண்டு நடைபெறும் டி20 உலகக் கிண்ண போட்டியில் இருந்து கணுக்கால் காயம் காரணமாக இந்திய வீரர் முகமது சமி விலகியுள்ளதாக பிசிசிஐ தலைவர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் பங்களாதேஷிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் முகமது சமி இந்திய அணியில் இணைவார் என தெரிவித்தார்.

வரும் ஜூன் மாதம் ஐசிசி டி20 உலகக் கிண்ண போட்டிகள் தொடங்கவுள்ளது. அந்தவகையில் ஐசிசி டி20 உலகக் கிண்ண தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்கொள்கிறது.

அதேபோல், ஜூன் 9 ஆம் திகதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிகள் நடைபெற உள்ளது. டி20 உலகக் கிண்ண தொடரில் இருந்து முகமது சமி விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. அண்மையில் நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் முகமது ஷமி 24 விக்கெட்டுகள் வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தி அசத்தினார்.

மேலும், இந்திய வீரர் முகமது சமி ஐபிஎல் 2024 தொடரில் இருந்தும் விலகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Type and hit enter