இலங்கையர்களுக்கு அதிர்ச்சி தகவல்!
உலக சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகின்ற நிலையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்றைய தினமும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
இதேவேளை, (2024.03.12) சந்தை நிலவரங்களின் படி, இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 671,295 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 23,680 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 189,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 173,700 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,710 ரூபாவாக பதிவாகியுள்ளது.