தனுஷை உரிமை கோரிய தம்பதி – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
நடிகர் தனுஷ் தங்களது மகன் என தம்பதி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்கு
மதுரை மேலூரை சேர்ந்த கதிரேசன் – மீனாட்சி தம்பதியினர் கடந்த 2015 ஆம் ஆண்டு மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் “நடிகர் தனுஷ் எங்கள் மகன் தான்.
பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது வீட்டை விட்டு ஓடி விட்டார். பெற்றோர் பராமரிப்பிற்காக தனுஷ் எங்களுக்கு மாத உதவித்தொகை வழங்க உத்தரவிட வேண்டும் என்று” தெரிவித்திருந்தனர். இந்த மனுவை மதுரை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது, நடிகர் தனுஷ் போலியான பிறப்பு மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை தாக்கல் செய்ததாக, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கதிரேசன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன், தவறான உள்நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டை நிரூபிக்க எந்தவித ஆதாரங்களும் தாக்கல் செய்யப்படவில்லை. இது ஒரு அபத்தமான வழக்கு என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.