OOSAI RADIO

Post

Share this post

வேலை தேடும் 55 லட்சம் மக்கள்!

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோரின் எண்ணிக்கை 54.81 லட்சம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த பிப்.29 ஆம் திகதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் விவரங்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் – தமிழ்நாடு முழுவதும் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை 5,481,564 ஆகும். அதில், ஆண்கள் 2,526,487 பேரும், பெண்கள் 2,954,792 பேரும் உள்ளனா். மூன்றாம் பாலினத்தவா் 285.

இந்த எண்ணிக்கையில், வயது வாரியாக பதிவுதாரா்களின் விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. 18 வயதுக்கு உள்பட்ட பாடசாலை மாணவா்கள் 11,495 பேரும், 19 முதல் 30 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 2,412,771 பேரும், 31 முதல் 45 வயது வரையுள்ளவா்கள் 1,721,980 பேரும் உள்ளனா். 46 வயது முதல் 60 வயது வரையுள்ள முதிா்வு பெற்ற பதிவுதாரா்களின் எண்ணிக்கை 239,391 என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வை மாணவா்கள் முடித்து தங்களது கல்வித் தகுதிகளை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யும்போது, இப்போதிருக்கும் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a comment

Type and hit enter